22,May 2025 (Thu)
  
CH
இந்திய செய்தி

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மத்திய அரசு

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 304 உயிர்களை பலி வாங்கியுள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்தது. இதன்மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து வந்தவரை தனிமைப்படுத்தி, தனி வார்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.





கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - மத்திய அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு