இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவடைந்துள்ளது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதற்கமைய இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் Dimuth Karunaratne 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன் அணியின் தலைவர் Dhananjaya de Silva 23 ஓட்டங்களையும் Vishwa Fernando 02 ஓட்டங்களையும் இன்றைய ஆட்ட நேர முடிவில் பெற்றிருந்தனர். முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Taijul Islam அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Vishwa Fernando 4 விக்கெட்டுக்களையும், Kasun Rajitha, Lahiru Kumara ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..