29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. Sylhetயில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Kamindu Mendis 164 ஓட்டங்களையும் அணியின் தலைவர் Dhananjaya de Silva 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதேநேரம் Dimuth Karunaratne 52 ஓட்டங்களை பெற்றக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan Miraz 04 விக்கெட்டுக்களையும், Nahid Rana மற்றும் Taijul Islam தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.  முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 280 ஓட்டங்களையும், பங்காளதேஷ் அணி 188 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு