29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

புதிய சாதனைப் படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ரோயல் ஜெலஞ்சர் பெங்களூர் அணி 263 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் Heinrich Klaasen அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் Abhishek Sharma 63 ஓட்டங்களையும், Travis Head 62 ஓட்டங்களையும் பெற்றக்கொடுத்தனர். இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.





புதிய சாதனைப் படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு