15,Jan 2025 (Wed)
  
CH
விளையாட்டு

IPL வீரருக்கு கிலோ கணக்கில் தங்கம்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஹென்சிர்ச் கிளாசனுக்கு அணி நிர்வாகம் சார்பில் அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டுள்ளமை தற்போது வைரலாகியுள்ளது. ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ஓட்டங்களை பெற்றிருந்தது, இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (27) சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுகிடையிலான போட்டி நடைபெற்றது. ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களை குவித்தது. டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ஓட்டங்களையும் குவித்தனர்.


இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





IPL வீரருக்கு கிலோ கணக்கில் தங்கம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு