16,Jan 2025 (Thu)
  
CH
விளையாட்டு

ஜெயித்தது யார் – சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பத்தில்?!

டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (31) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கு வராத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ஓட்டங்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. வெற்றியோ… தோல்வியோ… டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.


மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ… அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது





ஜெயித்தது யார் – சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பத்தில்?!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு