அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20/20 தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
ப்ரேரி வியூவில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் தவ்ஹித் ரிடோய் 58 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அமெரிக்கா அணி சார்பில் ஹர்மீத் சிங் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை எடுத்தார். மேலும் அவர் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்.
மேலும் நியூசிலாந்து முன்னாள் வீரர் கோரி எண்டர்சன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
டி20 ஐசிசி தரவரிசை பட்டியலில், பங்களாதேஷ் அணி 09 வது இடத்திலும், அமெரிக்கா 19 வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..