30,Oct 2024 (Wed)
  
CH
விளையாட்டு

ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்!

ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக், தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளில் விளையாடி 4,842 ஓட்டங்களை சேர்த்துள்ளளார். இதில் 22 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை நேரடியாக அவர் அறிவிக்கவில்லை என்றாலும், வர்ணணையாளராக செயல்பட்டு வருகிறார்.

நேற்று ராஜஸ்தான் ரோயல் அணியுடன் இடம்பெற்ற எலிமினேட்டர் போட்டியில் ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு