நெல்லியடி கொடிகாமம் பிரதான வீதியின், வேம்படி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று, பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துன்னாலை வடக்கு பகுதியை சேர்ந்த 78 வயதுடைய முதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நெல்லியடி காவல்துறைியனர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..