22,May 2025 (Thu)
  
CH
விளையாட்டு

நீரஜ் சோப்ரா 90மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை

டைமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.


டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் தற்போது நடக்கிறது. இதன் 3வது சுற்று கத்தாரின் தோகாவில் நடக்கிறது.


இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல், பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர். டைமண்ட் லீக் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், இந்திய நட்சத்திரங்கள் அதிகம் பங்கேற்பது இது தான் முதன் முறை.


இதில் நீரஜ் சோப்ரா, தனது 18வது டைமண்ட் போட்டியில் பங்கேற்கிறார். இன்று நடந்த போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.


இதற்கு முன் 2022 ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் இன்று தோகா டைமண்ட் லீக் போட்டியில் 90 மீ. தூரம் எறிந்து புதிய சாதனைபடைத்துள்ளார். தான் 90மீட்டர் இலக்கை நிச்சயம் அடைவேன் என தெரிவித்து வந்த நிலையில் அதனை தற்போது எட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.




நீரஜ் சோப்ரா 90மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு