இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் இருநாட்டு பிரதமர்களும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மற்றும் புத்தகயா தரிசனம் என்பனவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு வாரணாசி பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 10 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இந்தியாவுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..