12,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

அரசின் புதிய தொழில் நியமனங்கள் குறித்த அறிவிப்பு...!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் பிரகாரம், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் டிப்ளோமா அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிப்ளோமா பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவராக காணப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டதாரி பயிற்சி நெறிகளை நிறைவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விண்ணப்பதாரி, தமது பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு, பட்டம் பெற்று தொழில் இல்லாத நிலையில், ஒரு வருடத்தை கடந்தவராக இருப்பதை, கிராம சேவகர் பிரிவு மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உரிய விண்ணப்பங்களை WWW.presidentsoffice.gov.lk என்ற இணையப் பக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தமது டிப்ளோமா சான்றிதலின் பிரதியுடன், சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஒருவரின் ஊடாக உறுதி செய்து, எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் இணைக்கும் வேலைத் திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் தொடர்பாடல் பிரிவு, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 




அரசின் புதிய தொழில் நியமனங்கள் குறித்த அறிவிப்பு...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு