ந்தவொரு முன் அறிவித்தலும் இன்றி ஏற்படுத்தப்படும் திடீர் மின் தடை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த குழுவில் மின்சக்தி ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன், அதன் தலைவர் பேராசிரியர் ரஹ_ல அதலகே, பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ ரட்னசீலி மற்றும் மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழு, மின் தடைக்கான காரணம், தொழிநுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆராய்ந்து எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.













0 Comments
No Comments Here ..