18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்படிவங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பொன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019 டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதியன்று பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழிலின்றி இருப்பதாக கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமா தாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு - 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.




தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு