ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக மாத்திரமன்றி தி ஃபியர்லெஸ் ஹைனா (1979), ஹூ ஆம் ஐ மற்றும் பொலிஸ் ஸ்டோரி (1985) உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
ஜாக்கி சான் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ரைட் ஆன் திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.
இத்திரைப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023ஆம் ஆண்டு மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன திரைப்படங்களில் 3ஆவது இடத்தையும் பிடித்திருந்தது.
இந்தநிலையில் ஜாக்கி சானுக்கு 78ஆவது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலையுலகில் அவரது பங்களிப்பை பாராட்டி ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..