மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட குழாமை அவுஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில், இந்த குழாமில் மிட்செல் ஓவன் மற்றும் மாட் குஹ்னெமன் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் இருந்து ஜேக் ஃப்ரேசர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற கிளன் மெக்ஸ்வெல் டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
0 Comments
No Comments Here ..