எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக போட்டியிடுமானால் அதனை வரவேற்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்தனியே போட்டியிடுமானால அவர்கள் தத்தமது வாக்கு தளங்களை காத்துக்கொள்ளமுடியும்.
எனினும் இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜேவிபி என்பனவற்றுக்கு இடையில் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எதிராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவும் அண்மையில் கருத்துரைத்திருந்தார்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..