ஐக்கிய தேசியக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 4 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது,
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன,
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னிணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனத்தை அங்கீகரிப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது,
கடந்த செயற்குழுக்கூட்டத்தில் அங்கத்துவம் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் மத்திய செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..