மின்சார பயன்பாட்டினை குறைவாக செயற்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய மலையக பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
வறட்சி காரணமாக மவுசாக்கலை மற்றும் காசல்ட்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மவுசாக்கலை மற்றும் காசல்ட்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களில் நேற்று பதிவு செய்யப்பட்ட நீர் மட்டம் 19 அடியாக குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக நீர் மின் உற்பத்தி பாதிப்படையும் அபாயம் காணப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..