காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துமாறு காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளமை சர்வதேசத்தின் மீதான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பட்டியலை உறுதிப்படுத்துமாறு காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளது.
இதற்காக எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி வரை காணாமல் போனோரின் உறவுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
இது குறித்து கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோது சங்கத்தின் தலைவி ஈஸ்வரி எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் கருத்து தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..