19,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியை அழிக்கவே முடியாது! தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எந்த வகையிலும் அழிக்க முடியாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p><p>கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சுற்றியே அனைத்து அரசியல் கட்சிகளும் அணித் திரண்டன.

இடதுசாரி அரசியல் அமைப்புகள், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேச விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகள் சுதந்திரக் கட்சியின் பின்னால் வந்தன.

தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் வேறிடத்திற்கு தள்ளி சென்றுள்ளது. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனியான கட்சியை கட்டியெழுப்பவில்லை என்றால், வேறு ஒரு கட்சியின் கைபாவையாக மாறும்.</p><p>கட்சியின் பொதுச் செயலாளர் கட்சியை கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது அவருக்கு எதிராக குற்றம் சுமத்துகின்றனர்.

கட்சியின் தலைவரது குடியுரிமையை இரத்துச் செய்து கட்சியை அழிக்க முயற்சித்தனர். இப்படியான விடயங்களால் அழிந்து போகும் கட்சியல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

சில காலங்களில் மூங்கில் மரங்களை போன்று வேகமாக காற்று வீசும் போது தலையை சாய்து மீண்டும் எழ முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது அந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.




சுதந்திரக் கட்சியை அழிக்கவே முடியாது! தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு