நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறினார்.
மேலும் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார்.
0 Comments
No Comments Here ..