நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022ல் திருமணம் செய்துகொண்டனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றபோது எழுந்த சர்ச்சையில், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடந்துவிட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினர். இதனால் அவர்களின் பிரம்மாண்ட திருமணம் பெயரளவில் நடந்த ஒரு நிகழ்வு என விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது தங்கள் இரு மகன்களுடன் அதிக நேரம் செலவிடும் இருவரும், அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் மீது அதிருப்தியில் ஒரு பதிவைப் போட்டதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். தங்களைப் பற்றி வரும் வதந்திகளுக்கு இதுதான் தங்கள் ரியாக்ஷன் எனக் குறிப்பிட்டு, விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..