அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள "சக்தி திருமகன்" திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனியின் 25வது படமான இதற்கு அவரே இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஜில் ஜில்" பாடலுக்கான வரிகளை இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வாகீசன் இராசையா எழுதியுள்ளார். மேலும், இந்தப் பாடலை வாகீசனும் விஜய் ஆண்டனியும் இணைந்து பாடியுள்ளனர்.
"சக்தி திருமகன்" திரைப்படம் மூலம் வாகீசன் இராசையா பாடலாசிரியராகவும், பாடகராகவும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
0 Comments
No Comments Here ..