தென்னிந்தியத் திரையுலகின் மூத்த நடிகரும், பன்முகக் கலைஞருமான கோட்டா சீனிவாச ராவ் (83), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரையுலகில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். தனது தனித்துவமான குரல் மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
2003 ஆம் ஆண்டு வெளியான 'சாமி' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துத் தமிழிலும் பிரபலமானார். அவரது கதாபாத்திரங்கள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின.
நடிகர் மட்டுமல்லாமல், பாடகர் மற்றும் டப்பிங் கலைஞராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் கோட்டா சீனிவாச ராவ். மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தனது நடிப்புப் பயணத்தில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இறுதியாக அவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.
0 Comments
No Comments Here ..