14,Jul 2025 (Mon)
  
CH
சினிமா

மறைந்தார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி: திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87), பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று (ஜூலை 14) காலை மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி, 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட இவர், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்த சரோஜா தேவி, திருமணம் செய்து கொண்ட பிறகும் கதாநாயகியாக நடித்து, திருமணத்தால் வாய்ப்புகள் குறையும் என்ற மாயையை உடைத்த முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றவர்.




மறைந்தார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி: திரையுலகினர் அஞ்சலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு