சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமின் விசேட வைத்திய பாதுகாப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமான சீனாவின் வுஹான் நகரில் தங்கி கல்வி கற்றுவந்த குறித்த 33 இலங்கை மாணவர்களும் இம்மாதம் முதலாம் திகதி விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட சுகாதார சிகிச்சை மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மாணவர்கள் இராணுவத்தினரால் அகுரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..