நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவை ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவரை நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட 54 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்தோடு, ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..