எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்
அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய தேர்தல் முறைமை நாட்டிற்கு நன்மை பயக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..