சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்திவர முயற்சித்த நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானில் இருந்து சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்திர முயற்சித்தவர்கள் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகளுள் ஆண் ஒருவர் உட்பட மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் ஏற்கனவே இவ்வாறு தங்கக் கடத்தலில் ஈடுபட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 இலட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபா மதிப்புள்ள 90 ஆயிரம் சிகரெட்டுகள் அடங்கிய 450 அட்டைப் பெட்டிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சுங்க அதிகாரிகள் குறித்த நால்வருக்கும் 15 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..