16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பயணச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம்

பயணச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா ரயில் நிலையத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பயண சீட்டு இன்றி பயணித்த 100 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவர்களிடம் இருந்து தலா 3 ஆயிரத்து 20 ரூபா வீதம், மூன்று இலட்சத்துக்கும் அதிகளவான தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடர்ச்சியாக ரயில் நிலையங்களை மையப்படுத்தி இவ்வாறான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பயணச் சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 100 பேருக்கு தண்டப்பணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு