19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்படும்..? வெளியான புதிய தகவல்

எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிகைகளுக்கு அமைவாக மார்ச் மாதம் 11 ஆம் திகதிமுதல் 17 ஆம் திகதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுமெனவும், தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் மே 12 ஆம் திகதி கூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உய்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்ததை தொடந்து தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான காலம் என்பன குறித்த தகவல்களை கோரி ஜனாதிபதியின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாததன் காரணமாக அது தொடர்பாக தகவல்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, 19 ஆவது சீர்த்திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியினால் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர், வேண்டிய நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க அதிகாரம் உள்ளது.

இதன்படி, மார்ச் முதலாம் திகத்திக்கு பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில பொதுஜன பெரமுன வெற்றிப்பெற்று புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியினால், அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற செயற்படுகாலம் நான்கரை வருடத்தை தாண்டாத நிலையில், அதனை கலைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏற்ப்பட்ட குறுகிய கால இடைவெளியில், நாட்டை கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்படும்..? வெளியான புதிய தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு