24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ள கணபதிப்பிள்ளை மகேசன், முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவிவகித்துள்ளார். 

இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராக பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.  

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இருந்த நாகலிங்கம் வேதநாயகன் ஓய்வு பெறவுள்ளதன் காரணமாக, புதிய அராசாங்க அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடமைகளை பொறுப்பேற்றார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு