12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து...!

தென் ஆபிரிக்கா அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட 20க்கு இருபது தொடரை, 2 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, தென் ஆபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 223 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியது.  

டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3 க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய அதேவேளை, ஒருநாள் தொடர், 1 க்கு 1 என சமநிலையில் முடிவடைந்தது. 

இந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




T20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு