மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதுடன் ஒத்திவைப்பு விவாதத்திற்கான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை கோப் குழுவும் இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..