இந்தியாவின் புதுச்சேரி பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் தமிழ்நாடு - மதுரை நகருக்குச் சென்ற அவர் அங்கு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட மன்சுக் மாண்டவியா, அதன் முதற் கட்டமாகவே, புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..