23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஒஹ்டானி சோசன் தேரரின் சேவை மகத்தானது: பிரதமர் தெரிவிப்பு

பல தசாப்தங்கள் பழமையான ஜப்பான் - இலங்கை நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரர் உள்ளிட்ட ஹோங்கான்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மகத்தானது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் ஹோங்கான்சி மன்றம் மற்றும் கியோட்டோவிலுள்ள ஹோங்கான்சி விகாரையின் வணக்கத்துக்குரிய ஒஹ்டானி சோசன் தேரருக்கு 'சாசன ரத்ன' கௌரவ பட்டம் மற்றும் 'சன்னஸ்' சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதனைத் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால வரலாறு கொண்ட ஜப்பான் ஹோங்கான்சி கலாச்சார மேம்பாடு மன்றம் ஆனது, உலகளாவிய பௌத்த சமூகத்தினரின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்துவதற்கு, அதிகளவில் பங்களித்துள்ளது.

அத்துடன், ஜப்பானும் இலங்கையும் பழங்காலத்திலிருந்தே கடினமான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் முன்னின்றதாகவும், பிரதமர் தமது நேற்றைய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பான் முன்னாள் பேரரசரின் சகோதரர் ஒஹ்டானி சோசன் தேரர், டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஸ் சோபோன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர், நகோயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயப்படுவதோடு, விசேடமாக ‘மஹாயான தர்ம’ மற்றும் ‘தேரவாத’ பௌத்தத்துக்கு இடையில், பரஸ்பர தொடர்புகளை விருத்தி செய்ய பாடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.




ஒஹ்டானி சோசன் தேரரின் சேவை மகத்தானது: பிரதமர் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு