அரசாங்கத்தின் எதிர்வரும் செலவீனங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது,
இன்று முற்பகல் 9.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது,
அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு 367 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த இந்த இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது,
அத்துடன் விவாதத்தின் நிறைவில் இதற்கான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன,
இதேவேளை அத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி மீதான திருத்த சட்டமூலம், பொருளாதார சேவை விதிப்பனவு மீதான திருத்த சட்டமூலம் மற்றும் துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு மீதான திருத்த சட்டமூலம் என்பனவும் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..