15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஐ.நா. சபை இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளது!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டின் ஆரம்ப அறிக்கையில் இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது,

எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னர் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது,

அத்துடன் அவருடைய முழுமையான அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது,

மேலும் 30 கீழ் 01 தீர்மானத்தின் ஊடாக இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் முன்னேற்றம் காணப்படுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

ஆனால் குற்றங்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படாமை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களை அமைக்காமை மனித உரிமை மீறல்களை மீள நிகழ்த்துவதற்கு தூண்டுகோலாக அமையும் எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

அத்துடன் 30-1 யோசனையை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் அனைத்து சமூகங்களும் நிரந்தரமான சமாதானமிக்க வாழ்க்கையை கொண்டு செல்லக் கூடிய சாத்தியமுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

மேலும் இந்த யோசனையின் பெருமளவா விடயங்கள் இலங்கையின் உள்நாட்டு செயற்பாடுகளில் இருந்தே முன்மொழியப்பட்டுள்ளதா குறிப்பிடப்பட்டுள்ளது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலிருந்த போது நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் இராணுவத்தையும் சிவில் சமூகத்தையும் உள்ளடக்கிய தேசிய ஆலோணை சபை ஆகியவற்றை மையப்படுத்திய விடயங்களே தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மைக்காலமாக பகிரங்க கருத்துக்களை முன்வைக்கும் சிவில் சமூகம் மற்றும் சுயாதீன ஊடகங்களை பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் துன்புறுத்தல்களை அரச அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது,

அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கெதிராக குறிப்பாக முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக சில தேசியவாத மற்றும் அடைப்படைவாத குழுக்களின் பிரசாரங்கள் குறித்து மனித உரிமை ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார்.

இவ்வாறு வெறுப்புணர்வுப் பேச்சுக்களை தடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது,

அத்துடன் முஸ்லிங்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரித்து அண்மைய வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலட் வலியுறுத்தியுள்ளார்,

மேலும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும் பாதுகாப்புத்துறை சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதிலும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் மனித உரிமைகள் மீள நிகழாது என்பதற்கான எவ்வித உத்தரவாதங்களும் அரசாங்கத் தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது,




ஐ.நா. சபை இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு