19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

மாகாண சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுக்கும் விசேட கோரிக்கை

மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி அதிகரிப்புக்களை இடைநிறுத்துமாறு உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

முழு உள்ளூராட்சி கட்டணக் கட்டமைப்பையும் திருத்தியமைத்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் அதனை இலகுபடுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பணிப்புரை ஜனாதிபதியின் செயலாளர் பீபி ஜயசுந்தர ஊடாக அனைத்து ஆளுனர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன,

நாட்டின் முழுமையான வரி மற்றும் வரியற்ற கட்டமைப்பை இலகுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

மக்கள் வாழ்க்கையை இலகுபடுத்தல்,கொடுக்கல் இடைவௌியை குறைத்தல்,ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் ஆகியவற்றை கருத்திற் கொண்டே அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

அத்துடன் அரச நிறுவனங்களை மக்கள் நலன் சார் நிறுவனங்களாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.




மாகாண சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுக்கும் விசேட கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு