சிறுபான்மை சமூகத்தினர் தமது தேவைகளை பெற்றுக்கொள்ளும் வழிகளை சிந்தனையில் கொண்டு செயற்ப்படவேண்டுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், தமிழ் மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்ற நோக்கத்தையே கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கிலே முன்னெடுக்கப்பட்ட கட்டுமான துறைசார்ந்தவர்களின் நிதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது கைகூடாது போயுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..