18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணம்...

தீர்க்கதரிசனமோ அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையோ கொண்டிராத தமிழ் தலைமைகளை தெரிவு செய்தமையே தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரச நிறுவனங்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடு காரணமாக தமது மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகின்ற பெருந்தொகை நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்புவதாக முல்லைத்தீவு பிரதேச மக்கள் பிரதிநிதிகளினால் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், அரச திணைக்களங்கள் மீதோ அரசாங்க அதிகாரிகளின் மீதோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசியல் தலைமைத்துவங்களினால் சரியான வழிகாட்டல் வழங்கப்படுமாயின் அரச திணைக்களங்களை வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

எனவே, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் அசௌகரியங்கள் அனைத்திற்கும் தவறான தெரிவுகளே காரணம் என்று தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்திலேனும் தமிழ் மக்கள் சிந்தித்து சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.




தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு