அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கின்றன.
சுகவீன விடுமுறையை மேற்கொண்டே, இந்தப் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதிகாரிகள் தரப்புடன் 6 கோரிக்கைகளை முன் வைத்து அந்தத் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனையடுத்தே, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் பணிப்புறக்கணிப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இன்றைய பணிப்புறக்கணிப்பில் 30 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத் தக்கது.













0 Comments
No Comments Here ..