பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டமையே, முன்னறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும், கடந்த 3ஆம் திகதி, இரண்டு முதல் இரண்டரை மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி திட்டமிடப்படாத வகையில் மேற்கொள்ளப்படும் மின்வெட்டுகள், 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க திருத்தப்பட்ட மின்சார சட்டத்தின் படி குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கையின் பேரிலேயே இந்த அறிக்கை தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.













0 Comments
No Comments Here ..