24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத 130 கோடிக்கு தொலைத் தொடர்பு சாதன கொள்வனவு குறித்து விசாரணை

கடந்த அரசாங்க காலப்பகுதியில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது, 130 கோடி ரூபா பெறுமதியான தொலைத் தொடர்பு சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொருட்கள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, விசேட பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 10 தொலைபேசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றை கொண்டுவருவதற்கு உரிய விலைமனுகோரல்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பொருட்கள், மூன்று தொகைகளாக மத்திய கிழக்கு நாடொன்றில் உள்ள நிறுவனமொன்றின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இந்த கொள்வனவு நடவடிக்கையுடன் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு, காவல்துறையினர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசேட நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத 130 கோடிக்கு தொலைத் தொடர்பு சாதன கொள்வனவு குறித்து விசாரணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு