இலங்கையில் சிறுவர் போஷாக்கு குறைப்பாட்டை இல்லாதொழிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது,
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது,
அத்துடன் 2030 ஆம் ஆண்டளவில் போஷாக்கு குறைப்பாட்டை இல்லாதொழிக்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்களின் தீர்மானங்கள் தொடர்பில் சாதகமான கருத்துக்களை தெரிவித்தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிக சீனி அடங்கிய உணவினை அதிகளவாக சிறுவர்கள் தற்போது உட்கொள்கின்றமையானல் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கு குறைபாடு ஏற்படுவதாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வறுமையை ஒழிப்பதே போஷாக்கு குறைப்பாட்டை ஒழிக்க பிரதான காரணமாக அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் வறுமையை ஒழிக்க அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்
இதற்காக வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்குதல் மற்றும் நிவாரணங்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்,
அத்துடன் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளாவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்,













0 Comments
No Comments Here ..