22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

2019ஆம் ஆண்டில் யாழ். மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி! வெளியான புதிய தகவல்

2019ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஏற்றவாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான நிதி கணக்கறிக்கையினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது, உரிய முறையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், கணக்கறிக்கைகள் முறையாகப் பேணப்படவில்லை எனவும் மாநகர சபை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான இறுதி கணக்கறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியோர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த கணக்கறிக்கை குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் றெமிடியஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

எனினும், மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான நிதிக் கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




2019ஆம் ஆண்டில் யாழ். மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி! வெளியான புதிய தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு