24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் பிரச்சினை - ஒரு வாரத்துக்குள் தீர்வு

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் செயற்பாடு காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

கொழும்பு டிக்கோவிற்ற பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, அவர்களுடன் கலந்துரையாடியிருந்த போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் 35 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி புதுப்பிக்கப்படும் போது இந்த விடயம் தொடர்பில் ஆராய உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் செயற்பாடு காரணமாக உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிட்டுள்ளதாக இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை அடுத்து, இது தொடர்பாக ஆராய்ந்து, அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு சென்று ஒரு வாரத்துக்குள் நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் பிரச்சினை - ஒரு வாரத்துக்குள் தீர்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு