எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் அனைவரும், தமது வாக்குப் பலத்தை கட்டாயமாக நிரூபிக்க வேண்டும் எனவும், இதற்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலமே தமிழர்களின் இருப்பினை நிரூபிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சரியான காரணம் தெரியாமல் புதிய புதிய கட்சிகள் உருவாக்கப்படுவதாகவும், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இம்மானுவேல் அடிகளார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..