கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுதாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எளிதான பணி அல்ல என சுதாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
எனினும், ஈரான் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்டால் அது தேசிய பேரிடர் நிலைமையை நாட்டில் உருவாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, எவ்வாறான கடினமான சூழ்நிலை காணப்பட்டாலும் இலங்கையில் அவ்வாறானதொரு நிலை ஏற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது என மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..